விண்வெளியில் காணாமல் போன தக்காளி - ஓராண்டிற்கு பின் கிடைத்த அதிசயம்..!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணாமல் போன தக்காளி பழங்கள் ஒரு வருடத்திற்கு பின் கண்டுபிடிப்பு நாசா வெளியிட்ட தகவலின்படி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஓராண்டிற்கு முன் காணாமல் போன இரண்டு தக்காளிகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்காளி தோட்டம்
சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.இங்கே விண்வெளி வீரர்கள் இருந்து தங்கி பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் ரூபியோ 371 நாட்கள் விண்வெளி நிலையத்தில் செலவிட்டு மண் பயன்படுத்தாமல் தக்காளியை வளர்த்துள்ளார்.ரூபேயின் தக்காளி தோட்டம் விண்வெளியில் முதல் தக்காளி தோட்டமாகவும் தக்காளி விளைந்த பிறகு அதுவே விண்வெளியில் விளைந்த முதல் தக்காளி என்ற பெருமையையும் பெற்றது.
மீண்டும் கிடைத்தது
ரூபியோ இரண்டு தக்காளி பழத்தை பறித்து அவற்றை பிளாஸ்டிக் பையில் போட்டு சீல் வைத்துள்ளார். பின்னர் வேறு வேலையில் இருந்து திரும்பியபோது தக்காளி ஆய்வகத்தில் இருந்து காணாமல் போனது.பூஜ்ஜிய ஈர்ப்பு விசையினால் அவை மிதந்து சென்று ஆய்வகத்தில் உள்ள பொருள்களின் குவியல்களுக்கு இடையில் மறைத்திருக்கலாம் என நினைத்து, ரூபியோ அவற்றை ஆய்வகம் முழுவதும் தேடினார்.
ஆனால் அவற்றை அவர் கண்டுபிடிக்கவில்லை.ரூபியோ அந்த இரண்டு பழங்களையும் சாப்பிட்டு விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட போதிலும் அவர் அதை மறுத்தார்.இதனால் மன உளைச்சளால் பூமிக்கே திரும்பினார்.
ஒராண்டிற்கு பிறகு பிளாஸ்டிக் பையில் இருந்த தக்காளி பழங்கள் தற்போது விண்வெளி வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.ஆகையால் ரூபியோ குற்றமற்றவர் என நாசா தெரிவித்தது.