80 ஆண்டு அதிசயம் - வெடித்து சிதறும் பெரிய நட்சத்திரம்..! வெறும் கண்ணிலேயே பார்க்கலாம்

World
By Karthick Apr 11, 2024 10:10 PM GMT
Report

வானில் தெரியும் பல விஷயங்கள் இன்னும் நமக்கு ஆச்சரியமான ஒன்றாகவே உள்ளது.

வெடித்து சிதறும் நட்சத்திரம்

சூரிய கிரகணம் முடிந்துள்ள நிலையில், இறந்த வெண் குறுமீன் (White Dwarf) மற்றும் வயதான செம்பெருமீன் (Red Giant) ஆகியவற்றை உள்ளடக்கிய கொரோனா பொரியாலிஸ் பைனரி அமைப்பு (Binary star) ஒன்று வெடித்து சிதற இருக்கின்றது.

யாரு சாமி நீ..? 26 வருடங்கள் - ஒரே நாள் தான் லீவ் - அந்த லீவ் எதுக்கு'னு தெரியுமா..?

யாரு சாமி நீ..? 26 வருடங்கள் - ஒரே நாள் தான் லீவ் - அந்த லீவ் எதுக்கு'னு தெரியுமா..?

நாம் வசிக்கும் பூமியில் இரண்டு சுமார் 3,000ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த binary star டி கொரோனே பொரியாலிஸ் (T Coronae Borealis) அல்லது சுருக்கமாக T CrB என அழைக்கப்படுகிறது.

can-see-a-star-exploding-in-sky-with-eyes

இது வரும் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கிறது.

வெறும் கண்ணிலே....

80 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த நிகழ்வினை நாம் வெறும் கண்ணிலே பார்க்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. T CrB நட்சத்திரம் மிகவும் சிறியது என்பதால் அது நம் கண்ணிற்கு தெரியாது.

can-see-a-star-exploding-in-sky-with-eyes

ஆனால் அதே நேரத்தில் வெடித்து சிதறிய பிறகு, ஏற்படும் Fusion Reaction காரணமாக, இரவு நேரங்களில் நாம் இதனை பார்க்கமுடியும். T CrB அதன் உச்சத்தை அடைந்தவுடன், செவ்வாய் கிரகத்தைப் போல பிரகாசமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.