இனி தூக்கத்தில் கனவுகளை பகிர்ந்துக்கொள்ளலாம்..நிறுவனம் படைத்த சாதனை!

United States of America California World
By Swetha Oct 17, 2024 11:00 AM GMT
Report

இரு நபர்கள் காணும் கனவுகளை பரிமாறிக்கொள்ளும் முயற்சியில் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

கனவு

உலகில் விடை கண்டுபிடிக்க முடியாத புதிர்களில் ஒன்று மனிதனுக்கு உறக்கத்தில் வரும் கனவுகள். பொதுவாக அழமான கனவில் இருக்கும் ஒரு நபரை தொடுதல் உணர்வை ஏற்படுத்தாமல் விழிக்க வைப்பது கடினம்.

இனி தூக்கத்தில் கனவுகளை பகிர்ந்துக்கொள்ளலாம்..நிறுவனம் படைத்த சாதனை! | Can Communicate In Dream New Technology Found

இந்த நிலையில், கனவில் ஆழ்ந்திருக்கும் நபரை அவரை விழிக்க செய்யாமலே தொடர்பு கொள்வது குறித்த ஆய்வை அமெரிக்காவின் கலிஃபொர்னியாவை சேர்ந்த ரேம்ஸ்பேஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டது. ஆழ்ந்த கனவில் ஒரு நபர் இருந்தாலும், வெளி உலகில் பேசும் வார்த்தைகள், பாடல்கள் கனவில் ஒலிக்கும் என்பது வழக்கம்.

அடிக்கடி கனவில் பாம்பு வந்தால் என்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா?

அடிக்கடி கனவில் பாம்பு வந்தால் என்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா?

சாதனை

ஆனால் அது கனவின் ஒரு பகுதியாகவே தோன்றும். கனவு கலைந்தபின் அந்த பேச்சுகள், பாடல்கள் நினைவில் பெரும்பாலும் மறைந்துவிடும். மேலும், தூக்கத்தில் அதிகம் கனவு காணும் இரு நபர்களை ஆய்வுக்கு உட்படுத்திய ரேம்ஸ்பேஸ் ஆராய்ச்சியாளர்கள்,

இனி தூக்கத்தில் கனவுகளை பகிர்ந்துக்கொள்ளலாம்..நிறுவனம் படைத்த சாதனை! | Can Communicate In Dream New Technology Found

அவர்கள் ஆழ்ந்த கனவில் இருக்கும்போது அவர்களுக்கு சில வார்த்தை சமிக்ஞைகளை ஹெட்செட் மூலமாக ஏற்படுத்தியுள்ளனர். கனவில் கேட்ட அந்த வார்த்தைகளை நல்ல உறக்கத்திலும் அந்த நபர்கள் சத்தமாக சொன்னதோடு, கனவு கலைந்த பின்னும் நினைவு வைத்திருந்துள்ளனர்.

இந்த ஆய்வானது குறிப்பாக கோமா நிலையில் உள்ளவர்களுக்கான சிகிச்சை, மனோதத்துவம் போன்ற பல்வேறு மூளைசார் சிகிச்சைகளுக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என ரேம்ஸ்பேஸ் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.