இந்த பூச்சி மட்டும் இருந்தா போதும்; ஆடி, BMW காரே வாங்கிடலாம் - அவ்வளவு விலை!
பூச்சி ஒன்று கோடி விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
காஸ்ட்லி பூச்சி
உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான பூச்சியாக ஸ்டாக் பீட்டில் (Stag Beetle) கருதப்படுகிறது. இந்த ஸ்டாக் பீட்டில் பூச்சிகள் அதிகபட்சமாக ரூ. 75 லட்சம் வரை விலைக்கு வாங்கப்படுகிறது.
தற்போது இந்த பூச்சியை மருத்துவ குணங்களுக்காக ரூ. 1 கோடி வரையிலும் வாங்குவதற்கு நபர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்டாக் பீட்டில்
குணப்படுத்த முடியாத நோய்களுக்கு இந்த ஸ்டாக் பீட்டில் மருந்தாக பயன்படுத்தப்படுவதால் இவ்வளவு விலைக்கு விற்பனையாகிறது. இந்த 3 இன்ச் பூச்சியை வைத்து ஆடி, பி.எம்.டபிள்யூ சொகுசு கார்களை வாங்கி விடலாம்.
சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் நாட்டை சேர்ந்த பூச்சி வளர்ப்பாளரால் ரூ. 75 லட்சத்திற்கு இந்த ஸ்டாக் பீட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பூச்சிகள் அழுகிய மரங்கள், பழங்களை சாப்பிடுகின்றன. மேலும், குப்பைகளில்தான் காணப்படுகின்றன.
இதனால், கடும் குளிரை தாங்க முடியாது. வெப்பமான இடங்களில் மட்டுமே வாழும் தன்மை கொண்டது. இந்த பூச்சிகள் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் நைஜீரியா பகுதிகளில் அதிகம் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.