புரட்சியாளர் சே குவாராவின் மகன் மாரடைப்பால் மரணம்!

Cuba
By Sumathi Aug 31, 2022 09:30 AM GMT
Report

சே குவாராவின் மகன் கேமிலோ குவாரா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேமிலோ குவாரா

உலக மக்களால் கொண்டாடப்படும் தலைவர்களில் ஒருவரான சே குவாராவின் மகன் கேமிலோ குவாரா. இவர் வெனிசுலாவில் உள்ள காராகசிற்கு பயணம் மேற்கொண்டபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

புரட்சியாளர் சே குவாராவின் மகன் மாரடைப்பால் மரணம்! | Camilo Guevara Son Of Che Guevara Dies

இவர் அவ்வப்போது தனது தந்தையை சிறப்பிக்கும் நிகழ்வுகளில் அவ்வப்போது பங்கேற்று வந்தாலும் சராசரியான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். கியூபா நாட்டின் ஹவானாவில் உள்ள சே குவாரா கல்வி மையத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

மாரடைப்பால் உயிரிழப்பு

உயிரிழந்த கேமிலா குவாராவின் தாயார் அலெய்டா மார்ச் சேகுவாராவின் இரண்டாவது மனைவி. அவர் கடந்த 2012ம் ஆண்டு “சே குவாராவுடனான எனது வாழ்க்கை” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவருக்கு நான்கு குழந்தைகள்.

அதில் மூன்றாவது மகன்தான் கேமிலோ குவாரா மார்ச். இவருக்கு அலெய்டா, செலியா மற்றும் எர்னாஸ்டோ ஆகிய சகோதர, சகோதரிகள் உள்ளனர். கியூபாவில் வசித்து வந்த கேமிலோ குவாராவின் மரணம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கியூபா அதிபர் 

கியூபா அதிபர் மிகுவல் டியாஸ்கனேல் தனது டுவிட்டர் பக்கத்தில், “ ஆழ்ந்த வலியுடன் நாங்கள் சே குவாராவின் மகனை, அவரது சிந்தனைகளை ஊக்குவித்த கேமிலியாவை வழியனுப்புகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்கள் முழுவதும் சே குவாராவின் மகன் உயிரிழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.