மசாஜ் சென்டரில் அலறிய பெண்; வாலிபர் செய்த காரியம் - நாகர்கோவிலில் பரபரப்பு!
ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் இளம்பெண் ஒருவரை வீடியோ பதிவு செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தா சிகிச்சை மையம்
நாகர் கோவில் பகுதியில் ஆயுர்வேத மற்றும் சித்தா சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை மையத்திற்கு இளம்பெண் ஒருவர் மசாஜ் செய்வதற்காக சென்றுள்ளார்.
அவருக்கு அங்கிருந்த பெண் ஊழியர் மசாஜ் சிகிச்சை அளித்துள்ளார். அப்போது அந்த அறையில் இருந்த வெண்டிலேட்டர் வழியாக செல்போனில் வீடியோ எடுப்பதை அந்த பெண் பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். பின்னர் இது தொடர்பாக தனது உறவினர்களுக்கும், வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
பெண்களின் வீடியோ
மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்ததில், அந்த பெண்ணின் வீடியோ காட்சிகள் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர்.
இதனை தொடர்ந்த அந்த அந்த வாலிபரிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அந்த லேப்டாப்பில் மேலும் சில பெண்களின் வீடியோ காட்சிகள் இருந்துள்ளது.
இந்நிலையில் அந்த வீடியோக்களில் இருப்பது ஆயுர்வேத மையத்திற்கு சிகிச்சைக்கு வந்தவர்களா? வேறு ஏதாவது பெண்களின் வீடியோவா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.