உடை மாற்றும் அறையில் இருந்த ரகசிய கேமரா.. அலறிய பெண் - இளைஞர் செய்த அசிங்கம்!
பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரகசிய கேமரா..
தமிழகத்தில் உள்ள பல புனித தலங்களில் ஒன்று ராமேஸ்வரம் கோயில். இங்கு தீர்த்தமாடி சாமி தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர்.
இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் குளித்த பிறகு கோயிலுக்குள் சென்று 22 தீர்த்தங்களிலும் நீராடிய பின்பு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு குளித்து முடித்த பின் பெண்கள் உடை மாற்றுவதற்கு அங்கு ஏரளமான தனியார் உடைமாற்றும் அறைகள் சில உள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்கள் தீர்த்த கடலில் நீராடிவிட்டு அருகே இருந்த ஒரு தனியாருக்கு சொந்தமான டீ கடையுடன் கூடிய உடை மாற்றும் அறைக்கு ஈர துணியினை மாற்ற சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த அந்த டீ மாஸ்டர் வயதானவர்களை ஒரு அறைக்கும், பெண்களை ஒரு அறைக்கும் அனுப்பியுள்ளார். இதையடுத்து ஒருவித தயக்கத்துடன் சென்ற இளம்பெண் அறை பாதுகாப்பானதா என பார்த்துள்ளார்.
அலறிய பெண்
சுவற்றின் இடையே கேமரா பொருத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார். உடனே அந்த கேமராவை கொண்டு வந்து தனது தந்தையிடம் காட்டியுள்ளார். அவர்கள் இது குறித்து போலீசாரிடம் தகவல் அளித்தனர்.
அதன்படி அங்கு விரைந்து வந்த போலீஸார் அந்த ரகசிய கேமரா பொருத்தியிருந்த ராஜேஷ் கண்ணனையும், டீ மாஸ்டர் மீரான் மைதீனையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.
மேலும், பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் பதிவான மெமரி கார்டுகள் குறித்தும், அக்காட்சிகள் வெளிநபர்களுக்கு பகிரப்பட்டதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.