பாம்புகளை உணவாக சாப்பிடும் ஒட்டகங்கள்.. காரணம் என்ன ? இதை பாருங்க!
ஒட்டகத்திற்குப் பாம்பு உணவாக அளிக்கப்படுவது ஏன் ? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்பு
பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள். அப்படிப்பட்ட பாம்பு கடித்தால் மனிதர்கள் மட்டும் அல்ல புலி, சிங்கம், யானை போன்ற சக்தி வாய்ந்த விலங்குகளும் நொடியில் உயிரிழந்து விடும். ஆனால் இத்தகைய கொடிய விஷமுள்ள பாம்பு ஒட்டகத்திற்கு உணவாக அளிக்கப்படுகிறது.
பொதுவாக ஒட்டகங்கள் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டு உயிர்வாழ்கின்றன. ஆனால் பாம்புகளைச் சாப்பிடுவது இல்லை. ஆனால் ஹியம் என்ற நோயால் அதிக அளவில் ஒட்டகங்கள் பாதிக்கப்படுகிறது.
ஒட்டகங்கள்
இந்த நோய் தாக்கப்பட்டால் தண்ணீர் அல்லது பிற உணவை ஒட்டகங்கள் எடுத்து கொள்வதில்லை. இதன் காரணமாக பாம்புகள் குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகங்களுக்கு உணவளிக்கப்படுகிறது.
மேற்கு ஆசிய நாடுகளில் பாதிக்கப்பட்ட ஒட்டகங்களுக்குப் பாம்புகளை உண்பதால் நோய் குணமாகும் என நம்பப்படுகிறது. ஒட்டகத்தின் வாயைத் திறந்து உயிருள்ள ராட்டில் பாம்பை வலுக்கட்டாயமாக அதனுள் செலுத்தி தண்ணீர் ஊட்டப்படுகிறது.