தினமும் 4 பேருக்கு எச்ஐவி; 76 ஆயிரம் பேரின் நிலை? எய்ட்ஸ் ஆணையம் ஷாக் ரிப்போர்ட்!
76 ஆயிரம் பேர் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருவதாக தேசிய எய்ட்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் பாதிப்பு
தேசிய எய்ட்ஸ் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கம்போடியவில் ஒரு நாளைக்கு 4 பேர் விகிதத்தில் சுமார் 76.000 பேர் எச்.ஐ.வி. தொற்றில் பாதிக்கபட்டுள்ளனர்.
கிட்டதட்ட 1,400 பேருக்கு ஒரு ஆண்டில் தொற்று உறுதியாவதைத் தொடர்ந்து, புதிதாக பாதிக்கப்படுபவர்களில் 42 சதவீதம் 15-24 வயதான இளஞர்கள் என தெரியவந்துள்ளது. எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் தங்கள் எச்.ஐ.வி. நிலையை அறிந்திருக்கிறார்கள், 95 சதவீதம் பேர் எச்.ஐ.வி.யுடன் வாழ்கிறார்கள்.
திணறும் நாடு
அதில், அறிந்தவர்களில் 95 சதவீதம் பேர் உயிர்காக்கும் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு மூத்த அமைச்சரும், தேசிய எய்ட்ஸ் ஆணையத்தின் தலைவருமான இங் மவுலி, பொது சுகாதார அச்சுறுத்தலாக இருக்கும் எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும்,
2025 க்குள் 95-95 இலக்குகளை அடைவதற்கும் உறுதி பூண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இங்கு முதல் எச்.ஐ.வி. தொற்று 1991ல் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.