பெண்களை sweety ,baby என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலா? நீதிமன்றம் அதிரடி கருத்து!

Sexual harassment West Bengal
By Swetha May 14, 2024 08:17 AM GMT
Report

ஸ்வீட்டி பேபி என கூப்பிட்டு உயரதிகாரி தொல்லை தருவதாக இளம்பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பாலியல் துன்புறுத்தல்

இந்த காலகட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதே சமயத்தில் வர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. உடல்ரீதியான சீண்டல்கள் மறுப்புறம் இரட்டை அர்த்த சொல்லாடல்களாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்களை sweety ,baby என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலா? நீதிமன்றம் அதிரடி கருத்து! | Calling Women Sweety Baby Not Sexual Harassment

அந்த வகையில் கடற்படையில் பயிற்சியில் இணைந்த இளம்பெண். அவரது உயரதிகாரி பெண்ணை பெயர் சொல்லி அழைக்காமல் எப்போதும் ஸ்வீட்டி பேபி' என அழைத்துள்ளார். தொடர்ச்சியாக இப்படி நடந்ததால் அந்த இளம்பெண் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஸ்வீட்டி பேபி என்று தன்னை கூப்பிட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.

ஆனாலும் அந்த அதிகாரி நிறுத்தவில்லை. இதனால் கடுப்பான பெண், எத்தனையோ முறை ஸ்வீட்டி பேபி  என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று சொல்லியும், உயரதிகாரி நிறுத்துவதில்லை, அதனால், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

18 வயதில் லிப் லாக் காட்சியில் நடித்ததற்கு காரணம் இதுதான் - அனிகா ஓபன்டாக்

18 வயதில் லிப் லாக் காட்சியில் நடித்ததற்கு காரணம் இதுதான் - அனிகா ஓபன்டாக்

நீதிமன்றம் கருத்து

இந்த வழக்கு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கடற்படை உயரதிகாரி, ஸ்வீட் பேபி என்ற வார்த்தையைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தவில்லை. அப்படிக் கூப்பிட்டால் தனக்குப் பிடிக்கவில்லை என்று அந்தப் பெண் சொன்ன பிறகு ஒருபோதும் அதன் வார்த்தையை தான் பயன்படுத்தவில்லை என கூறியுள்ளார்.

பெண்களை sweety ,baby என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலா? நீதிமன்றம் அதிரடி கருத்து! | Calling Women Sweety Baby Not Sexual Harassment

பிறகு இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பேபி அல்லது ஸ்வீட்டி இப்படியான வார்த்தைகளால் அழைப்பது பாலியல் துன்புறுத்தலின்கீழ் அடங்காது. பாலியல் துன்புறுத்தல் என்று சொல்லாடலும் பொருத்தமற்றது. இன்றைய சமூகச் சூழலில், இப்படியான வார்த்தைகள் எல்லாம் சர்வசாதாரணமாக பயன்படுத்தக்கூடியவைதான்..

இந்த வார்த்தைகளுக்கு பாலியல் சாயம் பூசத் தேவையில்லை. இப்படி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கண்டுபிடித்து பாலியல் துன்புறுத்தல் புகார்களை கொண்டுவந்தால் அது பெண்களை பாதுகாக்கும் சட்டங்களுக்கே எதிரானதாக மாறிவிடும்.

பெண்களை sweety ,baby என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலா? நீதிமன்றம் அதிரடி கருத்து! | Calling Women Sweety Baby Not Sexual Harassment

மேலும், சம்பந்தப்பட்ட பெண், இப்படியான வார்த்தைகளை தன்னிடம் பயன்படுத்த வேண்டாம், தனக்கு அசௌகரியமாக இருக்கிறது என்று சொன்னபிறகு, அதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தியதாக எதிர்தரப்பும் தெரிவித்துள்ளது. ஆகையால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என உத்தரவிட்டார்.