ரக்ஷிதாவிடம் எல்லை மீறும் ராபர்ட் - பதம் பார்த்து வெச்சு விளாசிய இலங்கைப் பெண் ஜனனி...!

Bigg Boss Janani Gunaseelan
By Nandhini Nov 15, 2022 08:20 AM GMT
Report

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

அத்துமீறும் ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலிருந்து ராபர் மாஸ்டர் ரக்ஷிதாவை துரத்தி துரத்தி வரும் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

பலமுறை ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டரிடம் எடுத்துக்கூறியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. ராபர்ட் மாஸ்டரின் செயலுக்கு பலர் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

big-boss-6-vijay-janani-robert-master

ராபர்ட்டை விளாசிய ஜனனி

இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரொமோவில் ஜனனி ராபர்ட் மாஸ்டரைப் பார்த்து பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நீங்கள் டார்லிங்... டார்லிங்... என்று சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள். பிக்பாஸ் வீட்டிற்கு விளையாட வந்தீர்களா... இல்லை சுற்றுலாத் தளத்திற்கு சுற்றிப் பார்க்க வந்தீர்களா என்று கருக்கென்று கேள்வி கேட்டுவிடுகிறார்... இதற்கு ராபர்ட் மாஸ்டரோ சிரித்துவிட.. இதைப் பார்த்த ராக்ஷிதாவும் சிரிக்கிறார்..

தற்போது இது தொடர்பான ப்ரொமோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள்.. சரியான கேள்வியைத்தான் ஜனனி கேட்டிருக்கிறார்... இந்த ராபர்ட் மாஸ்டர் எதுக்குத்தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தாரோ... என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.