முழுக்க முழுக்க தானியங்கி இயந்திரம்தான்; உலகில் முதல்முறை - எந்த ஹோட்டல் தெரியுமா?
தானியங்கி இயந்திரங்களை கொண்டு மட்டுமே செயல்படும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
கலி எக்ஸ்பிரஸ்
தானியங்கி இயந்திரங்களை மட்டுமே கொண்டு செயல்படும் உணவகம் ஒன்று கலிஃபோர்னியாவில் திறக்கப்பட்டுள்ளது. தானியங்கி இயந்திரங்கள் நடத்தும் உலகின் முதல் உணவகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
பசடேனா பகுதியில் கலி எக்ஸ்பிரஸ் என்ற தானியங்கி இயந்திரங்கள் நடத்தும் உணவகம் செயல்படத்தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் தானியங்கி சமையல் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் மிஸோ ரோபோட்டிக்ஸ், கலி குழுமம் மற்றும் பணப் பரிமாற்றத்திற்கு உதவும் பாப் ஐடி ஆகிய மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த உணவகத்தை ஏற்பாடு செய்துள்ளன.
தானியங்கி உணவகம்
வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றத்திற்காக பாப் ஐடி தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்களை புகைப்படம் எடுத்துக்கொள்வதால் அவர்களின் வங்கிக்கணக்கிலிருந்து உணவுக்குத் தேவையான பணம் பெறப்படுகிறது. இங்கு மிஸோ ரோபோட்டிக்ஸ் இயந்திரங்கள் உணவுகளைத் தயார் செய்கின்றன.
அதிநவீன தொழில்நுட்ப தானியங்கி இயந்திரங்கள் மூலம் கிரில் கோழிக்கறி, எண்ணெயில் பொரித்த உணவுகள் சமைக்கப்படுகின்றன.
மேலும், உணவுகளை ஆர்டர் பெறுவது, சமைப்பது, பரிமாறுவது என அனைத்தும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.