நாட்டிலேயே இதுதான் முதல்முறை - வாடகைத் தாய் மூலம் பிறந்த கன்றுக்குட்டி!

Tirumala
By Sumathi Jun 27, 2023 04:20 AM GMT
Report

நாட்டிலேயே முதல் முறையாக வாடகைத் தாய் முறையில் கன்றுகுட்டி ஒன்று பிறந்துள்ளது.

வாடகைத் தாய்

திருப்பதி, கோசாலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலையில் வளர்க்கப்படும் ஓங்கோல் பசு ஒன்று

நாட்டிலேயே இதுதான் முதல்முறை - வாடகைத் தாய் மூலம் பிறந்த கன்றுக்குட்டி! | Calf Born Through Surrogacy In Tirupati

வாடகைத்தாய் போன்ற முறையில் சாகிவால் நாட்டு இனத்தை சேர்ந்த கிடாரி கன்று ஒன்றை பிரசவித்துள்ளது. அதற்கு பத்மாவதி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கன்று ஈன்ற பசு

வட மாநிலங்களில் இருந்து அதிக பால் உற்பத்தி கொடுக்கும் நாட்டு பசுக்கள் பலவற்றை தேவஸ்தான நிர்வாகம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது. உயர் ரக நாட்டு காளைகளின் விந்தணு மூலம் அவை கருத்தரிக்க செய்யப்பட்டன.

நாட்டிலேயே இதுதான் முதல்முறை - வாடகைத் தாய் மூலம் பிறந்த கன்றுக்குட்டி! | Calf Born Through Surrogacy In Tirupati

அந்த கருக்களை ஓங்கோல் போன்ற தென்னிந்திய உயர்ரக நாட்டு பசுக்களின் கர்ப்பப்பையில் செலுத்தி தேவஸ்தான கோசாலையில் வளர்த்து வருகின்றனர். இது போல் பத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் தற்போது தேவஸ்தான கோசாலையில் கர்ப்பமாக உள்ளது.

தீவிர ஏற்பாடு

அடுத்த 5 ஆண்டுகளில் 324 உயர்ரக சாகிவால் கிடாரி கன்றுகளை கோசாலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 10 பசுக்கள் சாகிவால் இனத்தைச் சேர்ந்த கிடாரி கன்றுகளை ஈன்றெடுக்க உள்ளன.

தேவஸ்தானத்தின் கோசாலையில் தினமும் 4000 லிட்டர் பால் உற்பத்தி செய்யவும், 60 கிலோ உயர்ரக நாட்டு பசு வெண்ணை தயார் செய்யவும் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ஜகவர் ரெட்டி ஆலோசனையின் பேரில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.