நயன்தாரா மட்டுமில்லை .. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற சினிமா பிரபலஙக்ள் , லிஸ்ட்

Nayanthara Vignesh Shivan
By Irumporai Oct 10, 2022 03:31 AM GMT
Report

வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. அந்த முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட சினிமா பிரபலங்கள் பற்றி காண்போம்.

அமீர்கான்

பாலிவுட் நட்சத்திர ஜோடியான அமீர்கான் - கிரண் ராவ் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது. இவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆசாத் ராவ் கான் என்கிற மகன் பிறந்தார்.

நயன்தாரா மட்டுமில்லை .. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற சினிமா பிரபலஙக்ள் , லிஸ்ட் | Nayanta Babies Through Surrogacy Indian Cinema

ஷாருக்கான்  

இந்தியில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான், கடந்த 2013-ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர். அவர் தான் ஷாருக்கானின் இளைய மகன் அப்ராம் கான்.

நயன்தாரா மட்டுமில்லை .. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற சினிமா பிரபலஙக்ள் , லிஸ்ட் | Nayanta Babies Through Surrogacy Indian Cinema

சன்னி லியோன்

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோனும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர். சன்னி லியோன் - டேனியல் வைபர் தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் ஆஷர், நோவா என்கிற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன

நயன்தாரா மட்டுமில்லை .. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற சினிமா பிரபலஙக்ள் , லிஸ்ட் | Nayanta Babies Through Surrogacy Indian Cinema

ஷில்பா ஷெட்டி

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி -தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் குழந்தையை தானே பெற்றுக்கொண்ட ஷில்பா ஷெட்டி, இரண்டாவது குழந்தையை வாடகைத் தாய் முறையில் பெற்றுக்கொண்டார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஷில்பா ஷெட்டிக்கு சமிஷா என்கிற மகள் இந்த முறையில் பிறந்தார்.

பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பாப் பாடகர் நிக் ஜோனாஸ் தம்பதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மல்டி மேரி என்கிற பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை அவர்கள் வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்டனர்.

நயன்தாரா

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் கலாச்சாரம் பாலிவுட்டில் பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், தற்போது கோலிவுட்டிலும் அது பரவி உள்ளது.

நயன்தாரா மட்டுமில்லை .. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற சினிமா பிரபலஙக்ள் , லிஸ்ட் | Nayanta Babies Through Surrogacy Indian Cinema

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி இந்த முறை மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது.