கங்காரு கேக்கை வெட்ட மறுத்த ரஹானே செய்த நெகிழ்ச்சி செயல்

sports bat ipl
By Jon Jan 22, 2021 06:42 PM GMT
Report

கங்காரு படம் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்ட மறுத்து ரஹானே நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதைனை படைத்தது.

இந்த தொடரை முடித்து சொந்த நாடு திரும்பிய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஹானே அவரது வீட்டிற்கு வந்தபோது, அவரது அப்பார்ட்மென்டில் உள்ளவர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அப்போது பிரமாண்ட கேக்கை வெட்டி மகிழ்ச்சியை கொண்டாட நினைத்தனர்.

அதற்கான கேக் ஒன்று தயார் செய்திருந்தனர். அந்த கேக்கின் மீது ஆஸ்திரேலியாவின் தேசிய சின்னமான கங்காரு இருப்பதுபோல் தயார் செய்யப்பட்டிருந்ததது. ரஹானேயிடம் அந்த கேக்கை வெட்டச் சொன்னார்கள்.

ஆனால், கங்காரு போன்று இருந்ததால், ராஹானே கேக்கை வெட்ட மறுத்துவிட்டார். இந்த சம்பவம் ரஹானே சிறந்த குணத்தை காட்டியது.