அதிமுக கூட்டத்தில் மாஜி அமைச்சர் போட்ட குண்டு - நிர்வாகிகளிடையே அடிதடி -என்ன நடந்தது?
அ.தி.மு.க ஆய்வுக்கூட்டத்தில் நிர்வாகிகள் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டம்
திருநெல்வேலியில், அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்து கொண்டு கூட்டத்தை நடத்தினார்.
அப்போது, முன்னாள் மாவட்ட பாப்புலர் வி.முத்தையா நெல்லை மாவட்டத்தில் படுதோல்வியை சந்தித்து குறித்து பேசிக்கொண்டிருந்தார். மேலும், தேர்தல் வாக்காளர் சரிபார்ப்பு முகாமில் கூட கட்சி நிர்வாகிகள் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொள்கின்றனர் என குற்றம் சாட்டினார்.
நிர்வாகிகள்
அந்த நேரத்தில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மைக் அருகே சென்று பாப்புலர் முத்தையாவை கண்டித்தார். இதையடுத்து, இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பு ஆனது.
கடும் மோதல் ஏற்பட்ட நிலையில், வேலுமணி இரு தரப்பினரையும் கண்டித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.