CAA சட்டம் - அதிமுக அனுமதிக்காது - இபிஎஸ் அறிக்கை..! அதிமுக எதிர்த்திருந்தால் சட்டமே நிறைவேறியிருக்காது..!!
அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, CAA சட்டத்தை ஒருபோதும் அதிமுக தமிழ்நாட்டில் அனுமதிக்காது என தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி அறிக்கை
CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது என்ற தலைப்பிட்டு, அந்த சட்டம் குறித்து அதிமுகவின் நிலைப்பாட்டை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 31, 2024
CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும்,
ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை…
2019-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் கூட, பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதை அதை எந்த வடிவிலும் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், சட்டமன்றத்திலும் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்தது அதிமுக அரசு என்பதையும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர், கூட்டணிக்காக கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு, அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்ததால் சிஏஏவை ஆதரித்தோம் என்று கூறினார்.
அதிமுக எதிர்த்திருந்தால்
ஆனால், CAA சட்டமாக அமலாவதற்கு ஆதரவாக வாக்களித்ததை யாரும் மறந்து விட முடியாது. அதிமுக உண்மையில் எதிர்த்திருந்தால், அந்த CAA சட்டமாகவே மாறியிருக்காது என்பது தான் நிதர்சனம்.
CAA சட்டம் முதன் முதலில், 2016-ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 9 டிசம்பர் 2019 -ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, 10 டிசம்பர் 2019-இல் நிறைவேற்றப்பட டிசம்பர் 11 ராஜ்யசபாவிலும் மசோதா நிறைவேறியது.
மசோதா நிறைவேற்றப்படும் போது, மக்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இருந்தது. ஆனால், அதே நேரத்தில் ராஜ்ய சபாவில் மசோதாவை நிறைவேற்ற அக்கட்சிக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவும் தேவைப்பட்டது.
அப்படி, பாஜக ஆதரவை எதிர்பார்த்த ஒரு கட்சி தான் அதிமுக. ராஜ்யசபாவில் மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் இறுதியாக இருந்தன. அப்போது அதிமுகவின் எண்ணிக்கை 11 ஆகும். ஆதரவாக வாக்களித்ததால், அதாவது மொத்தமாக 125 வாக்குகளை பெற்றதன் அடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால், ஆதரவு வாக்குகள் 114 வாக்குகளாக குறையும் பட்சத்தில், எதிராக 116 ஆக மாறி மசோதா நிறைவேறியிருக்காது என்பதே நிதர்சனம்.