மாநிலங்களவை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் பதவியேற்பு
சி.வி.சண்முகம்
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அக்கட்சியின் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்கள். கடந்த 10-ம் தேதி நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் சார்பில் போட்டியிட்ட இருவரும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.
அதன்படி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகத்திற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அக்கட்சியினர் சார்பில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாநிலங்களவை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் பதவி ஏற்றுக்கொண்டார்.