மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் காவலர்கள் கனிவோடு நடந்துக் கொள்ள வேண்டும் - டிஜிபி சைலேந்திரபாபு

Tamil Nadu Police
By Nandhini Aug 24, 2022 12:36 PM GMT
Report

மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் காவலர்கள் கனிவோடு நடந்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட டிஜிபி

சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதுவிதமான ஆன்லைன் மோசடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு நடத்தினார். அந்த வீடியோவில் டிஜிபி பேசுகையில், நீங்கள் எங்க வேலை பார்க்கிறீர்களோ, அந்த நிறுவனத்தின் அதிகாரி போல் போன் செய்து, மீட்டிங்கில் இருக்கிறேன் கிப்ட் கூப்பன் வாங்கி அனுப்புங்க...

அமேசான் கிப்ட் கூப்பன் தேவைப்படுகிறது. அந்த கூப்பனை வாங்கி அனுப்புங்க. ஒரு கூப்பன் விலை 10 ஆயிரம் ரூபாய். 10 கூப்பன் வாங்கி அனுப்புங்க. அப்புறம் உங்களுக்கு வாங்கி வாங்கி கொடுத்துவிடுகிறேன் என்று கேட்பாங்க.. இந்த மோசடியில் போய் சேர்ந்தீங்கன்னா உங்கள் பணம் போக வாய்ப்பு இருக்கிறது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த பேசினார்.


காவலர்களுக்கு உத்தரவிட்ட டிஜிபி

இந்நிலையில், நேற்று சென்னை வடபழனி காவல் நிலையத்தில் திடீரென்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் காவலர்களிடம் பேசுகையில், மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் காவலர்கள் கனிவோடும், அன்போடும் நடந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும், பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்று காவல் நிலைய அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். 

C. Sylendra Babu