தவெக மாநாடு; விஜய்- சீமான் கூட்டணி உறுதி? புஸ்ஸி ஆனந்த் சொன்ன அந்த பதில்!
விஜய்- சீமான் கூட்டணி கூட்டணி குறித்த கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் பதிலளித்துள்ளார்.
தவெக மாநாடு
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ள நடிகர் விஜய், அரசியலில் வேகம் காட்ட துவங்கியுள்ளார். 'தமிழக வெற்றி கழகம்' அறிவிப்பு வெளியானது முதல், கட்சி பணிகள் ஆங்காங்கே நடைபெற துவங்கிவிட்டன. அந்த வகையில், இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவளித்தார். இந்த நிகழ்வை தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னெடுத்து நடத்தியுள்ளார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
புஸ்ஸி ஆனந்த்
அப்போது அவரிடம் விஜய்- சீமான் கூட்டணி அமையுமா? தவெகவின் முதல் மாநாடு எப்போது? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த், “உலக பட்டினி தினத்தன்று மட்டுமல்லாது இனி வரும் காலங்களில் கட்சியின் உறுப்பினர்கள் வீட்டு விசேஷங்களின் போது அந்தப் பகுதியில் இருக்கும்
ஏழை, எளியவர்களுக்கு உணவளிக்கப்படும்” என்றார். அண்மையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயுடன் வருங்காலத்தில் கூட்டணி வைக்கத் தயார் எனப் பேசியிருந்தார். இது குறித்தும், விஜயின் பிறந்தநாளில் முதல் மாநாடு நடக்குமா? போன்ற கேள்விகளுக்கு ஒரே பதிலாக, இதுபற்றி எல்லாம் முடிவெடுத்து அறிவிக்க வேண்டியவர் தலைவர் விஜய் மட்டுமே! விரைவில் பதில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.