மாத முதல் நாளே அதிர்ச்சி - உயர்ந்த சிலிண்டரின் விலை..எவ்வளவு தெரியுமா?
வணீக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கணிசமான விலையில் ஹோட்டல்களும் விலையை உயர்தின. இது மக்களிடடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.
மக்களின் கடும் கண்டங்களுக்கு பிறகு, தொடர்ந்து 4 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைக்கப்படுகிறது. அதன் படி இம்மாதமும் 39 ரூபாய் கடந்த ஜூலை மாத துவக்கத்தில் குறைக்கப்பட்டது.
அதிகரிப்பு
இந்த சூழலில் தான், ஆகஸ்ட் மாதத்தின் முதல் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களே இந்த சிலிண்டர் விலையை தீர்மானிக்கிறார்கள்.
வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 7.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.1,817க்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது.