என் மனைவியை பார்த்துக்கொண்டே இருப்பது ரொம்ப பிடிக்கும் - ஆனந்த் மஹிந்திரா பளீச்!
எனது மனைவியை பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் பிடிக்கும் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
90 மணி நேர வேலை
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, “இந்தியா உலக அரங்கில் போட்டி போட வேண்டுமானால், நமது இளைஞர் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.
அவர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்து நாடு முழுவதும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இளைஞர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். எவ்வளவு நேரம்தான் வீட்டில் மனைவியின் முகத்தை உற்றுப் பார்க்க முடியும்?
ஆனந்த் மஹிந்த்ரா பதிலடி
அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுங்கள் என்று லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்த்ரா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அவரிடம் எத்தனை மணி நேரம் நீங்கள் வேலை செய்வீர்கள்? என்று கேட்டக்கபட்டது. அதற்கு, “எத்தனை மணி நேரம் வேலை செய்வீர்கள் என என்னிடம் கேட்காதீர்கள்.
வேலையின் தரம் குறித்துக் கேளுங்கள் என்று பதிலளித்தார். மேலும் எனது மனைவி அற்புதமானவர். அவரை பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.