திடீரென பற்றி எரிந்த அரசு பேருந்து.. தீ முழுவதும் பரவியதால் பரபரப்பு - பயணிகளின் கதி?

Tamil nadu Coimbatore Fire Accident
By Swetha Oct 24, 2024 04:38 AM GMT
Report

அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு செல்லும் அரசு பேருந்து ஒன்று சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வந்தபோது, அதில் இருந்து புகை வந்துள்ளது.

திடீரென பற்றி எரிந்த அரசு பேருந்து.. தீ முழுவதும் பரவியதால் பரபரப்பு - பயணிகளின் கதி? | Bus That Carried Passengers Suddenly Caught Fire

இதைக் கண்டதும் சுதாரித்துக் கொண்ட டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து கடகடவென கீழே இறங்கினர். இதையடுத்து பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்த பஸ் - அலறி அடித்து ஓடிய பயணிகள்...!

திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்த பஸ் - அலறி அடித்து ஓடிய பயணிகள்...!

பயணிகள்

ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீரென பற்றி எரிந்த அரசு பேருந்து.. தீ முழுவதும் பரவியதால் பரபரப்பு - பயணிகளின் கதி? | Bus That Carried Passengers Suddenly Caught Fire

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.