திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்த பஸ் - அலறி அடித்து ஓடிய பயணிகள்...!

Fire Viral Photos Accident Mumbai
By Nandhini Jan 25, 2023 10:38 AM GMT
Report

மும்பை பந்த்ரா பகுதியில் பிரஹன் மும்பை மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து Best நிறுவனத்தின் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ்

மும்பையின் பாந்த்ரா பகுதியில் best பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து, பஸ்ஸில் இருந்த அனைத்து பயணிகள் பதறி அடித்துக் கொண்டு உடனடியாக வெளியேறினர்.

சிறிது நேரத்தில் அந்த பஸ் முழுவதுமாக தீப்பிடிப்பு மளமளவென எரிந்தது. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் தீயை அணைத்தனர்.

தற்போது இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நல்லவேளையாக இந்த தீ விபத்தில் எந்த அசம்பாவிதச்சம்பவமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.      

best-bus-catches-fire-mumbai