சென்னையில் நடுரோட்டில் பற்றி எறிந்த அரசு பேருந்து - பதற வைக்கும் வீடியோ
Chennai
By Karthikraja
சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து தீ பற்றியுள்ளது.
மாநகர பேருந்து
சென்னை பாரிஸில் இருந்து சிறுசேரி செல்லக்கூடிய 102 எண் கொண்ட மாநகர ஏசி பேருந்து அடையாறு எல்.பி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எறிந்துள்ளது.
கியர் பாக்ஸ் அருகே புகை வருவதை கண்டறிந்த நடத்துனரும், ஓட்டுனரும் உடனடியாக பயணிகளை உடனடியாக இறக்கி விட்டு அப்புற படுத்தியுள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள்
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அடையாறு சற்று முன் pic.twitter.com/utiptSjHml
— இராவணன் சதீஸ் (@ThamilanSk) July 2, 2024
உடனே அங்குள்ள கடைகளை அடைக்க சொல்லியுள்ளனர். மேலும் அங்கிருந்த மக்களையும் 1 கி.மீ தூரத்துக்கு அப்புறபடுத்தியுள்ளனர்.