Saturday, Jan 18, 2025

தீ பிடித்து எரிந்த அரசு பேருந்து - அலறி அடித்து ஓடிய பயணிகள்

Tamil nadu
By Thahir 2 years ago
Report

பேருந்து நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த அரசுப் பேருந்து தீடிரென தீ பிடித்து எரிந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி செல்ல இருந்த தமிழ்நாடு அரசு கும்பகோணம், சீர்காழி பணிமனை அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்த நிலையில்,

திடீரென பேருந்தில் மின்கசிவு காரணமாக டீசல் டேங்க் அருகே தீப்பிடித்து மலமளவென தீ பரவி பேருந்தில் எரியத் தொடங்கியதுயடுத்து பஸ்ஸில் அமர்ந்திருந்த பயணிகள் அலர் அடித்துக் கொண்டு வெளியேறினர்.

தீ பிடித்து எரிந்த அரசு பேருந்து - அலறி அடித்து ஓடிய பயணிகள் | Fire On Government Bus

பின்னர் நான்கு புறமும் தீ பற்றி எழுந்து பஸ் முழுமையாக எரியத் தொடங்கியது இதனை எடுத்து சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி முற்றுவதுமாக தீயை அணைத்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு பயணிக்கும் ஆபத்து இல்லை இதுகுறித்து சிதம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.