பேருந்தில்.. இறங்கும்வரை டிக்கெட் பாக்கி தராத நடத்துநர் - கடுப்பான இளைஞர் செய்த காரியம்!
பேருந்தில் நடத்துநர் டிக்கெட் பாக்கி தராததால் இளைஞர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிக்கெட் பாக்கி
பேருந்தில் பயணம் செய்தவர்கள் நிச்சயம் ஒருமுறையாவது டிக்கெட் எடுக்க பணத்தை கொடுத்துவிட்டு,மீதி பாக்கி வராமல் தவித்திருப்பார்கள். அந்த வகையில், வேலூரில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து திருவண்ணாமலை வழியாக சென்றுள்ளது.
அப்போது அந்த பேருந்தில் பயணித்த இளைஞர் டிக்கெட் எடுத்துள்ளார். பணத்தை பெற்றுகொண்ட நடத்துநர் பாக்கி பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்ததாக என கூறப்படுகிறது. வேங்கிக்கால் மின்வாரிய பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இளைஞர்,
இளைஞர்
அங்கிருந்த தனது அந்த பேருந்தை பின்தொடர்ந்தே சென்றுள்ளார். பிறகு அந்த பேருந்தை வழி மறித்து இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தினார். திடீரென பிரேக் பிடித்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து நடத்துநர் இறங்கிவந்து இளைஞரிடம் விசாரித்தார். அதற்கு டிக்கெட் எடுத்த பாக்கி பணம் தரவில்லை என கூறி பணத்தை பெற்றுக்கொண்டார். இதில் ஆத்திரமடைந்த ஓட்டுநர் வழி மறித்த இளைஞரை தாக்கியதில்,
இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் இருத்தரப்பையும் சமரசம் செய்து இளைஞரை அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில், இளைஞரை தாக்கிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.