திடீரென தீப்பிடித்த பேருந்து..3 பேர் உயிரிழப்பு - மும்பையை உலுக்கிய கோர விபத்து!
பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா பகுதியிலிருந்து அந்தேரிக்கு மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வாகனங்கள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இதனையடுத்து இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விபத்து
உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.