தேவாலயத்தில் ஜெபத்தில் இருந்தவர்கள் மீது பயங்கர தாக்குதல் - 15 பேர் துடிதுடித்து பலி!
தேவாலய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கி சூடு
ஆப்பிரிக்கா, புர்கினா பாஸோ நாட்டில் புரட்சி மூலமாக ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த சில ஆண்டுகளாவே உள்ளூர் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், எசக்கானே என்ற கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள், வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
15 பேர் பலி
இந்த சம்பவத்தில் 12 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேரை அக்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களிலும் 3 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இச்சம்பவம் தொடர்பாக ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
மேலும், இந்த பகுதியில் செயல்படும் ஜிஹாதிக் பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், தேவாலயத்தின் மீதான இந்தத் தாக்குதலை அந்த பயங்கரவாத குழு நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுவரை சுமார் 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.