பும்ராவுக்கு இந்த பிரபல நடிகையுடன் திருமணமா?

cricket anupama bumah
By Jon Mar 06, 2021 10:24 AM GMT
Report

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கும், பிரபல நடிகையான அனுபமா பரமேஸ்வரனுக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. தற்போது இந்தியா- இங்கிலாந்து மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இதிலிருந்து பும்ரா விலகியுள்ளார்.

தன்னுடைய திருமணத்துக்கு தயாராகவேண்டி பும்ரா விலகியதாக தகவல்கள் தெரிவித்தன, எனவே யாரை அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பும்ராவின் காதலி என கிசுகிசுக்கப்பட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘இனிய விடுமுறை எனக்கு’ என பதிவிட்டுள்ளார். இதனால் பும்ரா இவரைத் தான் திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது.