MI'யின் கேப்டனாக ஹர்திக்..?? சர்ச்சையை கிளப்பிய பும்ராவின் பதிவு!!
IPL தொடரின் trade தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
IPL Trading
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் IPL தொடரின் அடுத்த சீசன் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அணிகளின் வீரர்கள் trade தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
அதில், குஜராத் அணியில் இடம்பெற்றிருக்கும் ஹர்திக் பாண்டியாவின் மாற்றம் தான் பெரும் பேசும் பொருளாக உள்ளது. மும்பை அணிக்கு அவர் திரும்புகிறார் என்ற செய்திகளுடன் அவர் வரும் சீசனில் அணியின் கேப்டனாகவே நியமிக்கப்படுவுள்ளார் என்ற செய்திகளும் வேகமெடுத்துள்ளன.
பும்ரா பதிவு
இது அந்த அணியின் சில நட்சத்திர வீரர்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடாகவே ஜஸ்பிரிட் பும்ராவின் பதிவு இருப்பதாக தற்போது ரசிகர்கள் சமூகவலைதளப்பாக்கத்தில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
அவர் தனது இன்ஸ்டா பதிவில், "சில சமயம் மௌனமே சிறந்த பதில்" எனக் கூறி இருக்கிறார். இந்த பதிவில் பும்ரா எந்த பெயரையும், சம்பவத்தையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடக்கத்தக்கது.