டெஸ்ட் போட்டி - Reverse Swing'இல் நொறுக்கிய பும்ரா..! 253 ரன்னில் காலியான இங்கிலாந்து..!

Jasprit Bumrah Indian Cricket Team England Cricket Team
By Karthick Feb 03, 2024 12:07 PM GMT
Report

 இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2-வது டெஸ்ட்

இரண்டாம் ஆட்டத்தை தொடர்ந்து இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்த, பின்பு விக்கெட்டுகள் சரிய துவங்கியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

bumrah-gets-6-wickets-england-collapses-for-253

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கம் முதலே நெருக்கடி கொடுத்தார் பும்ரா. ஒரு கட்டத்தில் 114/2 என்று ஆடிக்கொண்டிருந்த இங்கிலாந்து அணி, பும்ராவின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நிலை குலைந்தது.

மிரட்டிய பும்ரா

பும்ரா பந்தில் அடுத்தடுத்து ரூட் மற்றும் போப் இருவரும் முறையே 3 மற்றும் 4-வது விக்கெட்டாக ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 136 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

bumrah-gets-6-wickets-england-collapses-for-253

தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கே நடையை கட்டினார். சற்று தாக்குப்பிடித்து ஆடிய பென் ஸ்டோக்ஸ் மட்டும் 47 ரன்கள் எடுத்து பும்ராவிடம் சரணடைந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் - ஜெய்ஸ்வால் அசத்தல் இரட்டை சதம்- இந்திய மண்ணில் இது..! அடுத்தடுத்த சாதனைகள்..!

டெஸ்ட் கிரிக்கெட் - ஜெய்ஸ்வால் அசத்தல் இரட்டை சதம்- இந்திய மண்ணில் இது..! அடுத்தடுத்த சாதனைகள்..!

முடிவில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

bumrah-gets-6-wickets-england-collapses-for-253

இதன் மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.2-வது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை சேர்த்துள்ளது.