ஆக்கிரமிப்பு நிலத்தில் பிரமாண்ட கட்டடம் - இடித்து தள்ளிய அதிகாரிகள்!

Telangana Hyderabad Nagarjuna
By Vidhya Senthil Aug 24, 2024 07:41 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

ஹைதராபாத்தில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டியிருந்த நடிகர் நாகார்ஜுனாவின் பிரம்மாண்டக் கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

நடிகர் நாகார்ஜுனா

தெலுங்கானா மாநிலம் தும்மிடிகுண்டா பகுதியில் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் பிரமாண்டக் கட்டடம் உள்ளது.இதில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டது. இந்த அரங்கில் பிரபலங்களின் தம்பதி திருமண வரவேற்பு விழாகள் மற்றும் பல்வேறு பிரபலங்களின் குடும்ப நிகழ்வுகள் நடந்தன.

ஆக்கிரமிப்பு நிலத்தில் பிரமாண்ட கட்டடம் - இடித்து தள்ளிய அதிகாரிகள்! | Bulldozer On Actor Nagarjunas Convention Centre

இதனைத் தொடர்ந்து சினிமா படப்பிடிப்பும் பணிகள் நடந்தனர்.மொத்தம் 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அரங்கில் 10 ஏக்கருக்குக் கட்டடங்கள் மட்டுமே உள்ளன. அதில், 3.12 ஏக்கர் நிலத்தை நடிகர் நாகார்ஜுனா ஆக்கிரமித்து பிரமாண்டக் கட்டடம் கட்டி இருப்பது 2014 ஆம் ஆண்டில், நீர்ப்பாசனக் குழு மற்றும் வருவாய் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்தது.

தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!

தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!

ஆக்கிரமிப்பு  கட்டடம்

இந்த நிலையில்,ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடத்தின் ஆக்கிரமிப்புகளை இன்று காலை பெரிய ராட்சத இயந்திரங்களைக் கொண்டு இடித்து அகற்றியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

nagarjuna

முன்னதாக கடந்த 44 ஆண்டுகளாக ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளின் விவரங்களைச் செயற்கைக் கோள் வாயிலாக அறிந்துகொண்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் தெலுங்கானா அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.