4 வயது குழந்தையை தூக்கி வீசிய காளை - நெஞ்சை உலுக்கும் வீடியோ

Viral Video Uttar Pradesh
By Sumathi Mar 10, 2023 04:58 AM GMT
Report

தெருவில் நின்றுக் கொண்டிருந்த குழந்தையை காளை முட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதறவைக்கும் வீடியோ

உத்தரப்பிரதேசம், தானிபூர் மண்டியில், தெருவில் 4 வயது குழந்தை நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த காளை ஒன்று, திடீரென குழந்தையை முட்டி தள்ளியது.

4 வயது குழந்தையை தூக்கி வீசிய காளை - நெஞ்சை உலுக்கும் வீடியோ | Bull Threw 4 Year Old Child With Horn Viral Video

மேலும், குழந்தையை தலையால் தள்ளிக்கொண்டு அங்கேயே படுத்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பதறிப்போய் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் அங்கு தெருவில் சுற்றித் திரிந்த காளையை பிடித்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.