ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த சோகம் - காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு
ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்துள்ளார்.
ஜல்லிக்கட்டு
பொங்கல் திருவிழாவின் போது மதுரை அவனியாபுரத்தில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இன்று(14.01.2024) காலை, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 1,100 காளைகளுடன் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
உயிரிழப்பு
போட்டியில் மாடு பிடிக்கும் போது சில வீரர்களுக்கு காயம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. இதே போல் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 8வது சுற்றி முடிவில் மாடுபிடி வீரர்கள் 16 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 15 பேர், 5 பார்வையாளர்கள் என மொத்தம் 36 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மதுரை ராஜஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் காளை முட்டியதில் பலத்த காயம் அடைந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.