மொத்தமாய் சரிந்த 5 மாடி கட்டடம்; உயரும் பலி எண்ணிக்கை - தொடரும் சோகம்!
5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த நிலையில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
கட்டட விபத்து
குஜராத், பாலிகாம் பகுதியில் டிஎன் நகர் எனும் இடத்தில் அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளன. இங்கு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், 5 மாடிகளை கொண்ட கட்டடம் திடீரென்று இடிந்து விழுந்தது. கட்டடத்தில் வசித்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். உடனடியாக, போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
7 பேர் பலி
இதனையடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதில், க 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து 2வது நாளாக மீட்பு பணி நடந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் 6 முதல் 7 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு உள்ளது. இதனையடுத்து தொடர் விசாரணையில், இடிந்து விழுந்த கட்டடம் என்பது 2016-2017 ம் ஆண்டில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களாக அந்த பகுதியில் மழை பெய்தது தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.