சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கிய 4 தொழிலாளர்கள்

Chennai Accident
By Thahir Apr 19, 2023 08:17 AM GMT
Report

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 3 பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் 

பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் 4 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தீயணைப்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். திடீரென 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A 4-storey building collapses in Chennai

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையை சென்னை மாநகராட்சி அணுகியுள்ளதால்.

இந்த மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஈடுபட உள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மாநகராட்சி மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்து வருகிறார்.