இரவில் குட்டியை ஈன்ற எருமை மாடு; காலையில் அதிர்ச்சியில் மூழ்கிய கிராமம் - வீடியோ!
எருமை இரவில் குட்டியை ஈன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
விசித்திர நிகழ்வு
உத்தரபிரதேசத்தின் கிராமம் ஒன்றில் விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதுகுறித்த வீடியோவும் வைரலானது. அதில், தங்களுடைய எருமை இரவில் குட்டியை ஈன்றதாகவும்,
ஆனால் காலையில் பார்த்தபோது அது எருமைக்குட்டியாக இல்லாமல் பசுவின் கன்றாக இருந்ததாகவும் ஒரு குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதனை பார்த்த கிராமத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
வைரல் வீடியோ
பழுப்பு நிறத்தில் பசுவின் கன்றைப் போலவே தோற்றமளிக்கும் அந்தக் குட்டி எருமையின் அருகில் இருப்பதான காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள கால்நடை மருத்துவர்கள், அந்தக் குட்டி பசுவின் கன்றைப் போல தோற்றமளித்தாலும், அதன் சில உடல் அமைப்புகள் எருமையை ஒத்துள்ளது. வளரும்போது எருமையாகவே மாறும் எனத் தெரிவித்துள்ளனர்.