தமிழ்நாடு பட்ஜெட் 2024-25 - உச்சம் தொடும் வளர்ச்சி - வடசென்னைக்கு மட்டும் இவ்வளவு திட்டமா..?
இன்று தமிழ்நாடு நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்கான 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட்
இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அதில், வடசென்னைக்கு மட்டும் தனியாக ரூ.1,946 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய ஆறுகளான அடையாறு, கொசஸ்தலை உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.
கடற்கரை பகுதிகளான பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் போன்றவற்றை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடியும், 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட சென்னை சாலைகள் 18 மீட்டர் முதல் 30 மீட்டர் வரை அகலப்படுத்தப்பட்டுள்ளன. ரூ.365 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன,