சிறுமிகளை சீரழித்த குட்டி புத்தர்; குவிந்து கிடக்கும் பண மூட்டைகள் - யார் இவர்?

Sexual harassment Nepal Crime
By Sumathi Jan 12, 2024 07:11 AM GMT
Report

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Buddha Boy

நேபாளத்தில், ராம் பஹதூர் போம்ஜான் என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். `Buddha Boy' என்று அவரைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் அறியப்படுகிறார். அங்கு, சீடராகவும், சிஷ்யையாகவும் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

buddha-boy

இவர் மீது தனது பெண் சிஷ்யை மற்றும் பக்தர்களுக்கு ஆசிரமத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் கிளம்பின. 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - தூக்கி வீசப்பட்ட பச்சிளங் குழந்தை!

ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - தூக்கி வீசப்பட்ட பச்சிளங் குழந்தை!

பாலியல் வன்கொடுமை

அதனைத் தொடர்ந்து, 2010ல் 10க்கும் அதிகமானோர் புகாரளித்தனர். இதுதொடர்பாக, போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். அதன்பின், 18 வயது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் செய்தார்.

sexual-harrasment case

மேலும், ஆசிரமத்தில் இருந்து 2 ஆண், 2 பெண்கள் என மொத்தம் 4 பக்தர்கள் மாயமாகியுள்ளனர். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காத்மாண்ட் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே அங்கு விரைந்த போலீஸார் அவரை பிடிக்க முயல்கையில், அவர் பதுங்கியிருந்த வீட்டு ஜன்னலில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். அதன்பின் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து கட்டுக்கட்டாக நோபாள நாட்டின் பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.