20 வயது மூத்தவரை திருமணம் செய்துகொண்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி - பொற்கொடி யார்?
20 வயது இளையவரான வழக்கறிஞர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை திருமணம் செய்துக்கொண்டார்.
ஆம்ஸ்ட்ராங்
வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் இளவயதிலேயே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டார். தலித் சமூகத்தினரின் உரிமைக்காக பொது வாழ்க்கையில் ஈடுபட்டார்.
எனவே, பாதுகாப்புக்காக தேசிய உரிமம் பெற்ற இத்தாலிய துப்பாக்கி ஒன்றையும் எப்போதும் தன் கைவசம் வைத்திருந்தார். தந்தை கிருஷ்ணனும் தாய் லில்லியும் திருமணத்திற்கு வற்புறுத்தியும் சம்மதிக்காமல் இருந்துள்ளார்.
திருமணம் செய்துகொண்டால் தன்னுடைய தீவிர அரசியல் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என எண்ணியுள்ளார். பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகிலேயே உருவாக்கி இருந்த புத்த விகாருக்கு பொற்கொடி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
மனைவி உறுதுணை
ஆம்ஸ்ட்ராங்(44) பொற்கொடியும் அம்பேத்கர் மீது கொண்டவர் என்பதால் திருமணம் செய்துக்கொண்டார். 2016ல் இருவருக்கும் பௌத்த மத வழக்கப்படி திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்வில் தமிழகத்தின் தலித் இயக்கத் தலைவர்களான திருமாவளவன், பூவை. ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின் பொற்கொடியும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
ஆம்ஸ்ட்ராங்கை விட 20 வயது இளையவரான பொற்கொடி சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். அம்பேத்கர் மீது கொண்ட பற்றினால் அவரது வழியில் பொற்கொடியும் பௌத்த மதத்தைத் தழுவினார்.