ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் - நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பான வழக்கில் நீதிபதி தீர்பளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷ் என்பவரின் தம்பி பாலு உள்ளிட்ட 8 பேரை கொலை நடந்த அன்றே நள்ளிரவில் காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடல் அடக்கம்
அவரது உடல் அஞ்சலிக்காக தனியார் பள்ளி ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி அஞ்சலி செலுத்த தனி விமானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை வருகிறார். அவருடைய சொந்த இடத்தில் உள்ள கட்சி அலுவலகத்தின் வளாகத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கு ஆம்ஸ்ட்ராங் பொற்கொடி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணை தொடங்கியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. நெரிசல் நிறைந்த பகுதிகளில் அனுமதிக்க முடியாது மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் தான் அடக்கம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.