இனி போனில் சிம் போடாமலே பேசலாம் - BSNL கொண்டு வரும் eSIM திட்டம்
eSIM பயன்பாட்டை அறிமுகப்படுத்த உள்ளதாக BSNL நிறுவனம் தெரிவித்துள்ளது.
BSNL
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்ததை தொடர்ந்து பலரும் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்க்கு(BSNL) மாறினர்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட BSNL குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்குகிறது.
மார்ச் 2025
கடந்த 4 மாதங்களில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனாக உயர்வடைந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 1 லட்சம் 4G டவர்களை நிறுவுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.
#AskBSNL
— BSNL India (@BSNLCorporate) December 20, 2024
BSNL is in the process of enabling eSIM technology for its customers. I will be approximately available by March 2025.
-Director CM, BSNL Board https://t.co/O8nvDF5f7L
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் நடைபெற்ற AskBSNL நிகழ்வில் பயனர் ஒருவர் தமிழ்நாட்டில் எப்போது பிஎஸ்என்எல் E-Sim அறிமுகப்படுத்தப்படும் என கேட்ட கேள்விக்கு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் eSIM சேவை கிடைக்கும் என பிஎஸ்என்எல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
eSIM
eSIM என்றால் எம்பெடட் சிம் என பொருள் ஆகும். நாம் தற்போது பயன்படுத்தும் நானோ சிம் போல் இல்லாமல் இந்த eSIM செல்போனின் மதர்போர்டிலே பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிம்மை அகற்ற முடியாது. இதன் மூலம் சிம் கார்டை குளோனிங் செய்வது சிம் திருட்டு போன்ற மோசடிகளை தவிர்க்க முடியும்.
இந்த eSIM மூலம் ஒரே ஸ்மார்ட்ஃபோனில் ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் ஃபோன் எண்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த சிம்மை 5 நிமிடங்களில் ஆக்டிவேட் செய்துவிட முடியும்.
ஆனால் இந்த eSIM பயன்படுத்துவதில் சில குறைபாடுகள் உள்ளன. போன் ரிப்பேர் ஆகி விட்டால் சிம் கார்டை வேறு போனுக்கு மாற்றுவது போல், இதில் செய்ய முடியாது. பெரும்பாலான செல்போன்களில் தற்போது eSIM பயன்படுத்தும் வசதி இல்லை.