பிஎஸ்என்எல் ஊழியர் 3வது மாடியில் இருந்து குதித்து பலி - பரபரப்பு சம்பவம்!
கடலூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரியும் நபர் திடீரென மாடியில் இருந்து குதித்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த நபர் பிரதீப் குமார், இவருக்கு 50 வயது ஆகிய நிலையில் இவர் கடந்த மாதம் தெலங்கானாவிற்கு மாறுதலாகி, அங்கு பணி செய்து வந்தார்.
தற்போது அலுவலக ரீதியாக வேலை காரணமாக கடலூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது 3வது மாடியில் போனில் பேசிக்கொண்டு இருந்தவர் அங்கிருந்து அப்படியே கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது அருகில் இருந்தவர்கள் கீழே விழுந்தவரை உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் படுகாயம் அடைந்திருந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
விசாரணை
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அவர் போனில் பேசியொண்டு இருந்த போது தவறுதலாக விழுந்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் இது தற்கொலையாக இருக்குமோ என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அதோடு கடைசியாக போனில் பிரதீப் குமார் யாரிடம் பேசினார் என்றும் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.