ஒரே பெண்ணை திருமணம் செய்த 2 சகோதரர்கள் - காரணத்தை பாருங்க..
ஒரே பெண்ணை 2 சகோதரர்கள் திருமணம் செய்த சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
திரவுபதி பிரதா
இமாச்சல், ஷில்லாய் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பிரதீப் நெகி, கபில் நெகி. இவர்கள் ஹட்டி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் குன்ஹட் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சுனிதா சவுகானை திருமணம் செய்து கொண்டனர்.
ஒரே பெண்ணை 2 பேர் திருமணம் செய்யும் முறைக்கு ஜோடிதரன் அல்லது திரவுபதி பிரதா என்று பாரம்பரியமாக அழைக்கின்றனர். மூதாதையர்களின் சொத்து பிரிந்து போக கூடாது என்பதற்காகவும், எந்தப் பெண்ணும் கணவனை இழந்தவர்கள் என்ற நிலைக்கு ஆளாவதை தடுக்கவும் இந்த நடைமுறையை பின்பற்றுவதாக கூறுகின்றனர்.
வைரலான திருமணம்
பிரதீப் ஜல்சக்தி துறையில் பணியாற்றுகிறார். இவரது சகோதரர் கபில் வெளிநாட்டில் விருந்தினர் உபசரிப்பு துறையில் உள்ளார். இந்நிலையில், திருமணம் குறித்து மணப்பெண் சுனிதா கூறும்போது, “இந்த முடிவு என்னுடையது. என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
இந்த பாரம்பரிய வழக்கத்தைப் பற்றி நான் நன்கறிவேன். விருப்பப்பட்டுதான் இந்த முறையை தேர்ந்தெடுத்தேன்” என தெரிவித்துள்ளார். இந்த திருமணம் 3 நாள்களாக வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தியாவில் பலதுணை மணம் (polygamy) என்பது தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.