ஹனிமூன் அறையில் மனைவியோடு இருந்த தம்பி - ஆத்திரத்தில் அண்ணன் வெறிச்செயல்!
தம்பி மனைவியோடு தூங்கிய அறைக்கு அண்ணன் தீ வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதல் திருமணம்
கன்னியாகுமரி, விராலிக்காட்டுவிளை கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் முதல் மகனுக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், தம்பி அதேபகுதியில் உள்ள பெண் ஒருவரை காதலித்துள்ளார்.
இதற்கு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து, வேர்க்கிளம்பி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். மேலும், தாயை பார்க்க அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
தீ வைத்த அண்ணன்
அப்போது அண்ணனின் அறையில் உறங்குவாராம். இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. புதிதாக திருமணம் ஆகியுள்ளதால அறை குறித்து சண்டையிட்டுள்ளார் தம்பி. தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில்,
மதுபோதையில் வீட்டுக்கு வந்த அண்ணன் திடீரென பெட்ரோல் ஊற்றி தம்பி தூங்கும் அறைக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. உடனே தகவல் குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
அதில் வீட்டில் இருந்த கட்டில் மற்றும் துணிமணிகள் எரிந்து நாசமானது.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.