விபத்தில் சிக்கிய 'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட நடிகை - இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

Tamil Cinema Accident
By Thahir May 15, 2023 10:41 AM GMT
Report

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த நடிகை ஆதா ஷர்மா விபத்தில் சிக்கியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி 

சுதிப்தோ சென் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி இப்படம் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 5 ஆம் தேதி வெளியானது.

இந்த படம் திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பே பல்வேறு சட்டசிக்கல்களை சந்தித்து நீதிமன்ற உத்தரவு படி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

தமிழகத்திலும் இந்த படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பும் என்று உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு படம் ரீலிஸ் ஆனது.

விபத்தில் சிக்கிய நடிகை 

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் நடித்த நடிகை ஆதா ஷர்மா விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. இதையறிந்த நடிகை ஆதா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்து குறித்து பதிவிட்டுள்ளார்.

Actress Aadha Sharma was involved in the accident

அதில் நான் நன்றாக இருக்கிறேன் விபத்து குறித்து தகவல் பரவியதும் எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்தது. எங்கள் படக்குழுவில் அனைவரும் நன்றாக இருக்கிறோம்.

ஒன்றும் பிரச்சனையில்லை பெரிய விபத்து எதுவும் இல்லை. நீங்கள் என் மீது கொண்ட அக்கறைக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.