குலுங்கிய ரயில் பெட்டிகள் 7 பேரின் உடலுக்கு கீழ் உயிரோடு வலியோடு துடித்த சிறுவன்..!
ஒடிசா ரயில் விபத்தில் 10 வயது சிறுவன் விபத்தில் தப்பித்தது குறித்து தெரிவித்துள்ளான்.
உறவினர் வீட்டுக்கு சென்ற குடும்பம்
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒடிசா மாநிலம் போக்ராய் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சிக்கினர். அந்த குடும்பத்தில் 10 வயது சிறுவன் தேபேசிஷ் பத்ரா 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
தனது தாய், தந்தை, அண்ணனுடன் ரயிலில் கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்துள்ளான். பத்ராக் பகுதியில் உள்ள மாமா வீட்டுக்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தான் பாலசோர் அருகே ரயில் விபத்தில் சிக்கியது.
என் மீது உயிரிழந்தோரின் உடல்கள் கிடந்தன
இந்த விபத்து குறித்து புசிய அச்சிறுவன் பத்ராக் பகுதியில் உள்ள எங்கள் மாமா வீட்டுக்கு ரயிலில் சென்றோம். அங்கிருந்து புரி செல்ல திட்டமிட்டிருந்தோம்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தாய், தந்தை, அண்ணனுடன் சென்றேன். பாலசோர் ரயில் நிலையம் தாண்டியதும் திடீரென ரயில் பெட்டி பயங்கர சத்தத்துடன் குலுங்கியது.
அதன் பின் நான் மயக்கம் அடைந்துவிட்டேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை. கண் திறந்து பார்த்தபோது, பயங்கர வலியில் துடித்தேன்.
என் மீது இறந்தவர்களின் உடல்கள் கிடந்தன. எனது அண்ணன் சுபாசிஷ் தான் (10-ம் வகுப்பு படிக்கிறான்) என்னை காப்பாற்றினான் என்று தெரிவித்தார்.