ஒடிசா ரயில் விபத்து, ரத்தத்துடன் சிதறி கிடக்கும் காதல் கடிதங்கள் - மனதை உருக்கும் கவிதைகள்!
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் கண்டு எடுக்கப்பட்ட காதல் கடிதம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
விபத்து
கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது.
அதிவேகத்தில் சென்றபோது இந்த விபத்து ஏற்டபட்டதால் ரயில்கள் ஒன்றோடு ஒன்றாக மோதியதில் ரயில் பெட்டிகள் சிதறியது.
இதில் 290 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து இந்திய மட்டுமின்றி பல நாட்டின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடிதம்
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் தண்டவாளம் அருகே குழந்தைகளின் ஓவியப் புத்தகங்கள், பொம்மைகள், செருப்புகள், காதல் கடிதங்கள் எனச் சிதறிக் கிடக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் பெங்காலி மொழியில் ஒருவர் எழுதியிருக்கும் காதல் கடிதம் வைரலாகி வருகிறது. அது தமிழில், ‘சிறு மேகங்கள் மழையையும், சிறு கதைகள் காதலையும் உண்டாக்குகின்றன’ என எழுதப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இது தற்போது வைரலாகி வரும் நிலையில், இது அனைவரின் மனதையும் உருக்கும் விஷயமாக அமைந்துள்ளது.