எல்லை மீறிய அக்கா; கணவர் உறவினருடன் தகாத உறவு - தம்பி வெறிச்செயல்!
அடிக்கடி செல்போனில் பேசிய அக்காவை தம்பி கொலை செய்துள்ளார்.
எல்லை மீறிய அக்கா
தென்காசி, செட்டிகுறிச்சியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 1 மகளும், 3 மகன்களும் உள்ளனர். மகள் சுபாவேணி(21) தன்னுடைய அத்தை மகன் கருப்பசாமியை காதலித்து 3 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு 1 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவரின் உறவினர் ஒருவருடன் சுபாவேணி போனில் பேசி வந்துள்ளார். இதையறிந்த கருப்பசாமி கண்டித்துள்ளார். ஆனாலும் மனைவி அதனையே தொடர்ந்து வந்துள்ளார்.
தம்பி வெறிச்செயல்
இதனால் பிரச்சனை பெருசாகவே மனைவி தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் கிளம்பி வந்துள்ளார். இதற்கிடையில், மனைவி திரும்ப தன்னுடன் வாழ வராததால் கணவன் கேரளாவுக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், தாய் வீட்டிலும் சுபாவேணி அடிக்கடி அலைபேசியில் பேசியபடி இருந்துள்ளார். இதனை பார்த்த தம்பி கண்டித்தும் இடைவிடாமல் அக்கா போனில் பேசியதால் ஆத்திரமடைந்த 16 வயது தம்பி அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
சம்பவம் குறிந்து விரைந்த போலீஸார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய தம்பியை கைது செய்துள்ளனர்.